ஆறு மாநிலங்களில் தொடர் மழை பெய்யும் – மெட்மலேசியா எச்சரிக்கை

ஆறு மாநிலங்களில் தொடர் மழை பெய்யும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கோலாலம்பூர், 07 /01/2025 : வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆறு மாநிலங்களில் தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

திரெங்கானுவில் உலு திரெங்கானு, மாராங், டுங்கும், கெமாமான், பகாங்கில் ஜெராண்டுட், மாரான், குவாந்தான், பெரா, பெக்கான் ரொம்பின் ஆகிய பகுதிகளை உட்படுத்தி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலானில், குவாலா பிலா, ஜெம்போல், தம்பின் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி தொடர் மழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

மலாக்கா, மற்றும் ஜோகூருக்கும், சரவாக்கில், கூச்சிங், செரியன், சமரஹன், ஸ்ரீ அமன், பேத்தோங், சரிகேய், சிபு, முகா, கப்பிட், சோங், பிந்துலு ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி இதேபோன்ற எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Source : Bernama

#MetMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.