விசிட் மலேசியா 2026 பிரச்சாரத்தை பிரதமர் இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்

விசிட் மலேசியா 2026 பிரச்சாரத்தை  பிரதமர் இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்

செப்பாங், 06/01/2025 : விசிட் மலேசியா 2026 பிரச்சாரத்தை மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அவர்கள் இன்று செப்பாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். மலேசியாவை முதன்மையான சர்வதேச சுற்றுலா தளமாக மாறுவதற்கான அரசின் உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதி செய்கிறது.

2026 ஆம் ஆண்டிற்குள் 35.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கொண்டு வருவதை அரசு இலக்காகக் கொண்டுள்ளதாக பிரதமர் தனது உரையில் தெரிவித்தார். இதன் மூலம் 147.1 பில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்ட முடியும் என்றும் அதன் பெரும் பகுதி மற்றும் சுற்றுலா, உணவு மற்றும் பானங்கள் போன்ற துறைகளுக்கு பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிலையான சுற்றுலா துறையை மேம்படுத்துவன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தையும் வழங்க வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.

இந்த பிரச்சாரம் வெற்றியடைய அரசு துறைகள், மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

Photos Credit : PM Anwar Facebook

#VisitMalaysia2026
#PMAnwar
#TourismMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.