டாமான்சாரா, 05/01/2025 : பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கான பொருட்களை டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும், இலக்கவியல் அமைச்சருமான கோபிந் சிங் வட்டார மக்களுக்கு வழங்கினார்.
டாமான்சாரா நாடாளுமன்றத்தில் இந்த ஏற்பாடு செய்யபட்டது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு புவா பெய் லிங் கலந்து கொண்டார்.
பொங்கல் விழா நமது நாட்டில் புதிதான ஒன்றல்ல. அனைத்து இன மக்களுக்கும் நன்கு அறிந்த ஒரு பண்பாட்டு விழா ஆகும்.
பொங்கல் என்பது விவசாயத்தின் வெற்றியைக் கொண்டாடும் விழா மட்டும் அல்ல, ஒற்றுமையையும் நன்றி உணர்வையும் பறைசாற்றும் உன்னத விழா பொங்கல். பல்லின மக்கள் வாழும் நம் நாட்டில், ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இந்த விழா சிறப்பாக நடைபெற அமைச்சர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சி 6 தொகுதிகளில் நடைபெறுகிறது. மொத்தம் 400 பேருக்கு பொங்கல் கொண்டாட்டத்திற்கான பொருட்கள் இன்று வழங்கப்படுகின்றன.
இன்றை நிகழ்ச்சி தாம் எதிர்ப்பார்த்ததை விட சிறப்பாக அமைந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர், அனிதா தெரிவித்தார். கொடுத்த பொருட்கள் பொங்கலுக்கானது என்றாலும், மக்கள் அதனை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றாலும், இது போன்ற நிகழ்ச்சிகளில் நமது பண்பாட்டை பறைசாற்றும் வகையில் அனைத்து இனமும் ஒற்றுமையாக இணைந்து ஏற்பாடு செய்வது நமது நாட்டுக்கே உரிய தனிச் சிறப்பு ஆகும் என பெர்சாத்துவான் வனித்தா இந்தியா சங்கத்தின் தலைவருமான அவர் கூறினார்.
#GobindSinghDeo
#Pongal
#PongalInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.