நஜிப்பிற்கு ஆதரவான பேரணியைத் தொடர வேண்டாம் என்ற முடிவை பேராக் அம்னோ ஏற்கிறது

நஜிப்பிற்கு ஆதரவான பேரணியைத் தொடர வேண்டாம் என்ற முடிவை பேராக் அம்னோ ஏற்கிறது

கோலாலம்பூர், 04 /01/2024 : வரும் திங்கட்கிழமை, புத்ராஜெயா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவான ஒருமைப்பாட்டு பேரணியைத் தொடர வேண்டாம் என்ற கட்சி மற்றும் அமலாக்கத் தரப்பினரின் முடிவை ஏற்பதாக பேராக் மாநில அம்னோ தெரிவித்துள்ளது.

கூட்டரசு அரசியலமைப்பு பிரிவு 42(1) மற்றும் (2)க்கு ஏற்ப மன்னிப்பு வழங்குதல், தண்டனைகளை ஒத்திவைத்தல் மற்றும் தண்டனைகளைக் குறைக்கும் மாட்சிமைத் தங்கிய மாமன்னரின் சிறப்பு அதிகாரத்தைத் தங்கள் தரப்பு மதிப்பதாக பேராக் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாரனி முகமட் தெரிவித்தார்.

டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வழக்கு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்பூர்வமாக தீர்க்கப்பட வேண்டும் என்ற மத்திய அம்னோவின் நிலைப்பாட்டைப் பேராக் மாநில அம்னோ ஆதரிப்பதாக அறிக்கை ஒன்றில் சாரனி முகமட் கூறினார்.

இது மாமன்னரின் உத்தரவிற்கு இணங்கும் அதேவேளையில் தேசிய சட்ட செயல்முறைக்கு மதிப்பளிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் விவரித்தார்.

நாட்டிற்கு அதிகப் பங்களித்த தலைவரான நஜிப்பிற்கு நீதி கிடைக்கும் வகையில் அவரின் வழக்கிற்கு எதிரான மேல்முறையீட்டை மாமன்னர் சிறந்த முறையில் பரிசீலிப்பார் என்று தங்கள் தரப்பு நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் சாரனி குறிப்பிட்டார்.

Source : Bernama

#AMNO
#Najib
#NajibRally

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia