சாய் நந்தினி மூவி வோர்ல்ட் ஏற்பாட்டில் மூன்றாவது சோழன் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்றது.

சாய் நந்தினி மூவி வோர்ல்ட் ஏற்பாட்டில் மூன்றாவது சோழன் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்றது.

காஜாங், 31/12/2024 : சாய் நந்தினி மூவி வோர்ல்ட் ஏற்பாட்டில் மூன்றாவது சோழன் சர்வதேச திரைப்பட விழா கடந்த 29 டிசம்பர் 2024 அன்று சுங்கை பட்டானியில் உள்ள ரிவர்பிரண்ட் சிட்டியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

வண்ணமயமாக நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில் திரைப்பட துறையை சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மூன்றாவது முறையாக இந்த ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை முனைவர் லட்ச பிரபு அவர்கள் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தினார். திரு. மதியழகன் நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளராக இருந்தார். திரு. விக்னேஷ் பிரபு இந்த விருது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சி ஆரம்பம் முதல் முடிவு வர சிறப்பாக நடைபெற வழிவகுத்தார்.

சோழன் சர்வதேச திரைப்பட விருது விழா 2024 இன் சிறப்பு விருதினராக திரு சிங்கப்பூர் சின்னையா அவர்கள் தனது மனைவியுடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பு செய்தார். பிரதம துறையின் அரசியல் செயலாளர் டத்தோ ஸ்ரீ சம்சுல் இஸ்கந்தர், பிரதம மந்திரியின் சிறப்பு அதிகாரி திரு. சண்முகம் மூக்கன் மற்றும் சுற்றலா, கலை & கலாச்சார அமைச்சில் மலேசிய சுற்றுலா துறையின் இயக்குநர் திரு . மனோகரன் பெரியசாமி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

திரைப்படம், தொலைக்காட்சி திரைப்படம், குறும்படம், ஆவணப்படம், இசை வீடியோ, சிறப்பு விருதுகள் மற்றும் சாதனை விருதுகள் என பல்வேறு பிரிவுகளில் பல கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி அங்கீகாரம் வழங்கப்பட்டது சோழன் சர்வதேச திரைப்பட விருது விழா 2024 இன் சிறப்பாக அமைந்தது.

இத்தகைய விருது விழாக்கள் கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் அமையும் என்பதை என் தமிழ் இந்த தருணத்தில் குறிப்பிட விரும்புகிறது. ஏற்பாட்டுக் குழுவினருக்கு பாராட்டுக்களையும் விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களையும் என் தமிழ் தெரிவித்துக் கொள்கிறது.

#CholanInternationalFilmFestival2024
#SNMW
v#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia