என் தமிழ்

2 மருத்துவக்கல்வி மாணவர்கள் பலி

op_2231737b

ஜூன் 8- கூச்சிங்கில் மூன்று ஆடவர்களால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த இரு மருத்துவக்கல்வி மாணவர்கள் பலியாகினர்.

உடலில் ஏற்பட்ட பலத்தக் காயங்களால் 23 மற்றும் 24 வயதுடைய அவ்விரு மருத்துவ மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலியானதாகக் கூறப்படுகிறது.

அதிகாலை 4 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், பெரோடுவா விவா ரகக் காரில் வந்த மூவரில் இருவர் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியுகாஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவ்விரு மாணவர்களும் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இங்கு கல்வியை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top