கிறிஸ்மஸ் பெருநாளை முன்னிட்டு திங்கள் முதல் பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டம் தொடக்கம்

கிறிஸ்மஸ் பெருநாளை முன்னிட்டு திங்கள் முதல் பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டம் தொடக்கம்

செந்தூல், 20/12/2024 : அடுத்த வாரம் 25-ஆம் தேதி கொண்டாடப்பட விருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 14 பொருட்களை உட்படுத்தி, எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கி பெருநாட் கால அதிகபட்ச விலை திட்டத்தை உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவின அமைச்சு அமல்படுத்தவிருக்கின்றது.

2011-ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் லாப எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் 5 நாட்களுக்கு அத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அதன் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி கூறினார்.

இறக்குமதி செய்யப்பட்ட எலும்பு இல்லாத ஆட்டிறைச்சி, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைக்கோஸ், சிவப்பு முள்ளங்கி, தக்காளி, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு வெங்காயம், பெரிய மஞ்சள் வெங்காயம், உயிருள்ள பன்றி மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஆகியவை பட்டியலிடப்பட்ட 14 பொருட்களில் அடங்கும் என்றும் அர்மிசான் கூறினார்.

அதோடு, கோழி இறக்கைகள், உயிருள்ள கோழிகள், பன்றி இறைச்சி ஆகியவை சபா, சரவாக் மற்றும் லாபுவான் சந்தைகளிலும், அதிகபட்ச விலைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை.

இன்று, கோலாலம்பூர், பண்டார் பாரு செந்தூல், UTC செந்தூலில் 2024 கிறிஸ்துமஸ் பெருநாளுக்கான அதிகபட்ச விலைத் திட்டம், SHMMP தொடர்பான அறிவிப்பு மற்றும் ரஹ்மா மடானி விற்பனைத் திட்டம், பி.ஜெ.ஆர்.எம்-மில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனை கூறினார்.

Source : Bernama

#ArmizanMohdAli
#Christmas2024
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia