கெடா, பெர்லிஸ் & ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

கெடா, பெர்லிஸ் & ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

கோலாலம்பூர், 10/10/2024 : கெடா, பெர்லிஸ் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், பேராக்கில் அதன் எண்ணிக்கை நிலையாக உள்ளது.

கெடாவில் காலையில் இருந்த 1,141 குடும்பங்களைச் சேர்ந்த 3,503 பேரைக் காட்டிலும், மதியம் சுமார் 4 மணிக்கு 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,474 பேராக குறைந்துள்ளது.

24 தற்காலிக நிவாரண மையங்களில் பாதிக்கப்பட்ட அனைவரும் தஞ்சமடைந்திருப்பதாக, மலேசிய பொது தற்காப்புப் படையின் மாநில துணை இயக்குனர் மேஜர் முஹமாட் சுஹைமி முஹமாட் செயின் கூறினார்.

குபாங் பாசு, கோத்தா செத்தார், பொக்கோக் செனா மற்றும் பெண்டாங் ஆகிய மாவட்டங்களில் தற்காலிக நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக, இன்று தாம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Source : Bernama

#KedahFloods
#PerlisFloods
#JohorFloods
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.