விவேக கைப்பேசிகளின் மூலம் பேரிடர் குறித்த அவசரகால எச்சரிக்கை அறிவிப்பை செயல்படுத்தும் முறை

விவேக கைப்பேசிகளின் மூலம் பேரிடர் குறித்த அவசரகால எச்சரிக்கை அறிவிப்பை செயல்படுத்தும் முறை

புத்ராஜெயா, 10/10/2024 : விவேக கைப்பேசிகளின் மூலம் இயற்கை பேரிடர் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை செயல்படுத்தும் முறை குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் தொடர்பு அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தும்.

மக்கள் குறிப்பாக ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அண்மைய தகவல்களை வழங்கும் இவ்வழிமுறை பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

“எனவே, வானிலை ஆய்வு மையத்திற்கு உதவும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வோர் இட்டத்திலும் நாம் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி நான் பின்னர் எம்.சி.எம்.சி.யுடன் கலந்தாலோசிக்கவிருக்கிறேன். வெள்ள அபாய ஒலியைத் தவிர்த்து தங்களின் கைப்பேசி மூலமாகவும் அவர்கள் உடனுக்குடன் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். அச்சலுகையை நாங்கள் கருத்தில் கொள்கிறோம்”, என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தொடர்பு அமைச்சின் பணியாளர்களுடனான மாதாந்திர கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

இதனிடையே, வடகிழக்கு பருவமழை முன்னரே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் தயார்நிலையை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Source : Bernama

#Smarphones
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia