இந்தியர் நடனத் திருவிழா பினாங்கில் பொது மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நடந்தேறியது

இந்தியர் நடனத் திருவிழா பினாங்கில் பொது மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நடந்தேறியது

பினாங்கு, 02/10/2024 : பினாங்கு மாநில இந்தியத் திரைப்படச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 27/09/2024 மாலை மணி 5.00 முதல் இரவு மணி 11.00 வரை கோம்டார் பினாங்கில் உள்ள A அரங்கில், இந்தியர் நடனத் திருவிழா 2024 வெகு சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு மாநிலத்தில் இத்தகைய இந்திய நடனத் திருவிழா இதுவே முதல்முறையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மலேசிய சுற்றுலாத்துறை மற்றும் பிரதம அமைச்சின் ஆதரவில் இந்த நடனத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பினாங்கு மாநில கலைஞர்களை மையமாக கொண்டு பிற மாநில கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த இந்தியர் நடனத் திருவிழாவில், இந்தியர்களின் பல வகையான பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன. இந்த நடனத் திருவிழாவில் பரதம், குச்சுபுடி, மோகினியாட்டம், கதகளி, கரகாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், பங்கரா போன்ற பல வகையான இந்திய நடனங்களை பல கலைஞர்கல் மேடையில் ஆடி மக்களை வெகுவாக மகிழ்வித்து கவர்ந்தனர்.

இந்த விழாவுக்கு, பினாங்கு அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு மேதகு சுந்தரராஜூ அவர்களும் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபரும் நன்கொடை நெஞ்சருமாகிய திரு.சின்னையா நாயுடு மற்றும் திருமதி.ஜோபினா நாயுடு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை ரசித்தனர்.

அன்பு இல்லக் குழந்தைகளை இந்த நிகழ்விற்கு அழைத்து வந்து நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வைத்திருந்தனர் ஏற்பாட்டுக் குழுவினர். அந்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கி மகிழ்வித்தனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள் மற்றும் நடனக் குழினர்கள் GDA Dancers, Vanavil Dancers, Easwary Dancers என அனைவருக்கும் மேடையில் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கும், திரளாக வந்திருந்து நிகழ்ச்சியை கண்டு களித்து நிகழ்ச்சியை பெரிதும் வெற்றி பெறச் செய்த பொது மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை ஏற்பாட்டுக் குழு சார்பாக இயக்குநர், நடிகர் திரு. விக்னேஷ் பிரபு தெரிவித்துக் கொண்டார்.

நமது பாரம்பரிய கலைகளை போற்றி பாதுகாக்க இத்தகைய நிகழ்ச்சிகள் மிகவும் பெரிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என என் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

#IndianDanceFestival2024
#PPPIPP
#Entamizh
#Malaysia
#MalaysiaNews