ஊழியர்களின் ஊதிய நிலுவைப் பிரச்சனை; விரைந்து தீர்வு காண நிறுவனங்களுக்கு வலியுறுத்து

ஊழியர்களின் ஊதிய நிலுவைப் பிரச்சனை; விரைந்து தீர்வு காண நிறுவனங்களுக்கு வலியுறுத்து

புசான், 02/10/2024 : ஊழியர்களின் ஊதிய நிலுவைப் பிரச்சனையை எதிர்நோக்கும் ஊடக நிறுவனங்கள் உடனடியாக அதற்கு தீர்வுக் காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்களுக்குப் பல மாதங்களாக சம்பளம் வழங்காதது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

“என்.யு.ஜே. மற்றும் கெராம் ஆகிய தரப்பின் ஊடக அறிக்கை வழி, சம்பளம் வழங்காத ஊடக நிறுவனங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினை மற்றும் 6 மாதங்கள் கடந்தும் ஊடகவியலாளர்களுக்கு இன்னும் இழப்பீடு அல்லது சம்பளம் கிடைக்கவில்லை என்பதை நான் அறிந்தேன். இது ஏற்றுக்கொள்ளத்தக்கது, இது மிகவும் பொருத்தமற்றது என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு ஊடக சுதந்திரம் தேவை, ஆனால் ஊடகம் இலவசம் அல்ல”, என்று அவர் கூறினார்.

மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு தென் கொரியாவுக்குச் சென்றிருக்கும் ஃபஹ்மி ஃபட்சில் அவ்வாறு கூறினார்.

இப்பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் பொருட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே மத்தியஸ்தகராக செயல்பட தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

The Malaysian Insight மற்றும் The Vibes நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கான சம்பள நிலுவைப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்குமாறு தேசிய மலேசியப் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் Gerakan Media Merdeka அமைப்பு ஆகியவை நேற்று வலியுறுத்தின.

Source : Bernama

#SalaryIssue
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.