கோலாலம்பூர், 01/09/2024 : தென்கிழக்கு ஆசியாவில் முன்னணி தொழில்நுட்ப புத்தாக்க மையமாக உருவாகுவதற்கு மலேசியா சிறந்த நிலையில் உள்ளது.
புத்தாக்க பொறியியல் திறன் மற்றும் ஆற்றல்களை பயன்படுத்தி தொழில்நுட்ப வளர்ச்சியில் வட்டார முன்னோடியாக செயல்படும் ஆற்றலை மலேசியா கொண்டிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
மலேசிய பொறியியலாளர் வாரியம் BEM-இல் இரண்டு லட்சத்திற்கு அதிகமானோர் பதிவு செய்திருக்கும் நிலையில், ஒவ்வோர் ஆண்டும் 15 ஆயிரம் பேர் புதிதாக பதிவு செய்வதாக ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
”பொறியியலை மேம்படுத்துவதற்கான அடித்தளம் கல்வியில் உள்ளது. வளர்ச்சியை நோக்கிச் செல்லும் உலகில் சிறந்து விளங்குவதற்கு, தேவையான திறன்கள், அறிவு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்ந்து வரும் பொறியியலாளர்களுக்கு வழங்கக் கல்வி நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும். STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறையில் முதலீடு செய்ய வேண்டும். இளம் தலைமுறை தயாராக இருப்பதற்கு மட்டுமல்ல சவால்களை எதிர்கொள்ளவும் இது ஈர்க்கும்,” என்றார் அவர்.
இன்று நடைபெற்ற BEM மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றும் போது ஃபடில்லா யூசோப் அவ்வாறு கூறினார்.
2030ஆம் ஆண்டு புதிய தொழில்துறை முதன்மை திட்டம் மற்றும் மடானி பொருளாதரத்தின் கீழ் அதிக ஊதியம் பெறும் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றம் கண்ட நாடு என்ற இலக்கை அடைவதற்கு பொறியியல் துறை முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia