புத்ராஜெயா, 01/10/2024 : இன்று தொடங்கி அமல்படுத்தப்படும், 2024ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகைப் பிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம், சட்டம் 852 விவேகமாகவும் நியாயமாகவும் பயன்படுத்தப்படும்.
இச்சட்டத்தை அமல்படுத்துவதில், உடனடி மற்றும் கல்வி அமலாக்கம் ஆகிய இரண்டு அம்சங்கள் பின்பற்றப்படுகின்றன.
சிறுவர்களுக்கு, மின்னியல் சிகரெட் அல்லது VAPE பொருட்களை விற்பதில், சட்டத்திற்கும் உரிமைக்கும் மதிப்பளிக்கும் சூழலை உருவாக்குவதில் இவ்விரு அம்சங்களும் அமல்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட இச்சட்டம், அதன் கீழுள்ள விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளுடன் இன்று முதம் அமலுக்கு வருகிறது.
இச்சட்டத்தை அமல்படுத்தும் சவால்களில், புகைப் பிடிக்கும் பொருட்களை வாங்குபவர்களின் வயதை அடையாளம் காண்பது மற்றும் அதை வாங்குபவர்கள் பதின்ம வயதினரா என்பதை உறுதிசெய்வது ஆகியவையும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
”எங்களின் அமலாக்கத்தில், அதிகாரத்தைப் பயன்படுத்தி விவேகமாகவும் நியாயமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். சட்டங்கள் மற்றும் உரிமைகளைக் குறிப்பாக சிறுவர்களுக்கு (புகை பிடிக்கும் பொருட்களை) விற்பதில் மதிப்பளிக்கும் சூழலை இந்தத் தரப்புகள் எதிர்பார்க்கின்றனர்,” என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் சுகாதார அமைச்சு அளவிலான முதியோர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் சுல்கிப்ளி அவ்வாறு கூறினார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia