குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி குணமடைந்து வருகிறார்

குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி குணமடைந்து வருகிறார்

புத்ராஜெயா, 28/09/2024 : Mpox எனப்படும் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி தற்போது குணமடைந்து வருவதோடு, அவரின் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடவடிக்கையும் விரைவில் நிறைவடையவிருக்கிறது.

இந்நிலையில், புதிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதையும் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் உறுதிப்படுத்தினார்.

”இதுவரை அன்று பதிவாகிய ஒரு சம்பவம்தான். புதிதாக நாங்கள் 56 சந்தேக நபர்களை பரிசோதித்தோம். ஒருவருக்கு நோய்க் கண்டுள்ளது. மற்றவருக்கு இல்லை. நாங்கள் கவனமாக இருப்பதாக நான் கருதுகிறேன். சிபிஆர்சி எனக்கு அண்மையத் தகவலை தெரிவித்து விட்டனர். அவர்களும் மிகவும் கவனமாக உள்ளனர். கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறலாம். அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், குரங்கம்மை கட்டுப்பாட்டில் உள்ளது,” என்றார் அவர்.

குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசி குறித்து விவரித்த அவர், அதன் தொடர்பில் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் சம்பந்தப்பட்ட தடுப்பூசி விநியோகத்தை பெற சுகாதார அமைச்சு காத்திருப்பதாகவும் டாக்டர் சுல்கிப்ளி கூறினார்.

கடந்த செப்டம்பட் 16-ஆம் தேதி நாட்டில் முதலாவது குரங்கம்மை நோய்ச் சம்பவம் அடையாளம் காணப்பட்டது.

Source : Bernama

#MalaysiaNews
#LatestNews
#Malaysia
#MPOX
#Entamizh