பள்ளிகளில் நிகழும் இடைநிற்றல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை ஆதரிப்பீர் – பிரதமர்

பள்ளிகளில் நிகழும் இடைநிற்றல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை ஆதரிப்பீர்  - பிரதமர்

பத்தாங் காலி , 27/09/2024 : நாட்டில் பள்ளிகளில் நிகழும் இடைநிற்றல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

சிறார்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதை விட்டு விட முடியாது என்றும் அவர்களின் திறன்களை மேம்படுத்த அனைத்து ஒத்துழைப்பும் உதவியும் வழங்கப்பட வேண்டும் என்றும் மாண்புமிகு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

”இவ்விவகாரத்தில் பெற்றோர் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் கல்வியில் இருந்து விடுபடும் மாணவர்களைக் காப்பாற்றும் கடமை ஆசிரியர்களுக்கு சுமையாக உள்ளது. எனவே சிறார்கள் இவ்வாய்ப்பைச் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதிலிருந்து நம்மால் மீள முடியாது என்பதற்கு எவ்வித காரணமும் இல்லை,” என்றார் அவர்.

இன்று சிலாங்கூர், பத்தாங் காலி, ராசா தேசியப்பள்ளியில் நடைபெற்ற Anak Kita: Semarak Potensi Malaysia di Sekolah Kebangsaan Rasa எனும் நிகழ்ச்சிகாக பதிவு செய்யப்பட்ட காணொளியில் பிரதமர் அவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் மற்றும் இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அஸிசான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2024 வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைசுக்காக 5,870 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்ட வேளையில், பள்ளிகளில் நிகழும் இடைநிற்றல் பிரச்சனைகளை கையாள, Anak Kita திட்டத்திற்கு கூடுதலாக 10 கோடி ரிங்கிட் நிதி வழங்கப்பட்டதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Source : Bernama

#Anwar
#MalaysiaNews
#LatestNews
#Malaysia
#Entamizh

Comments are closed, but trackbacks and pingbacks are open.