பேராக்கில் வெள்ள நிலவரம் முழுமையாக சீரானது, 29 குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்

பேராக்கில் வெள்ள நிலவரம் முழுமையாக சீரானது, 29 குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்

ஈப்போ, 24/09/2024 : பேராக்கில் ஏற்பட்ட வெள்ள நிலவரம் முழுமையாக சீரானதை தொடர்ந்து கெரியன் மாவட்டத்தில் உள்ள செகோலா கெபாங்சான் சாங்கட் லோபக்கில் உள்ள தற்காலிக நிவாரண மையம் (பிபிஎஸ்) இன்று பிற்பகல் 2 மணிக்கு மூடப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 29 குடியிருப்பாளர்களுக்கு PPSஇல் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

பல்வேறு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில், பேரிடர் பகுதியில் நிலைமை தற்போது பாதுகாப்பாகவும் கட்டுக்குள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று செயலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிபிஎஸ் எஸ்கே சாங்கட் லோபக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை மற்றும் உயர் காற்றழுத்த நிலையால் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து திறக்கப்பட்டது.

Source : Berita

#PerakFloods
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaLatestNews
#Malaysia