பத்துமலையில் உலக சைவ நன்னெறி மாநாடு

பத்துமலையில் உலக சைவ நன்னெறி மாநாடு

கோலாலம்பூர், 24/09/2024 : தருமபுர ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையோடு பக்திமனம் கமழும் இந்த உலக சைவ நன்னெறி மாநாட்டில் இந்துக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும். சைவ மடங்களுள் ஒன்றான தருமபுர ஆதீனம் (தருமை ஆதீனம்) குதிரு ஞானசம்பந்தரால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து சமய அன்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். முற்றிலும் இலவசமான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமய சிந்தனையையும், அறிவையும் பெருக்கிக்கொள்ள அற்புதமான வாய்ப்பு இது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்களும், அருள்மிகு மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ நடராஜா அவர்களும், தருமை ஆதீனப் புலவர் மரபின் மைந்தன் முத்தையா அவர்களும், முனைவர் இரா செல்வநாயகம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சமய உரையாற்றவிருக்கிறார்கள். இன்னும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் சைவ சமயக் குறவர்களும், சைவ சமய அறிஞர்களும், சமயவாதிகளும் பங்கேற்கவிருக்கிறார்கள்.

அருளாசி பெறுவதோடு சமயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

சமயமும் தமிழும் இரு கண்களாக வாழ்வோம்!
சமயக் கல்வியையும் தமிழையும் ஊட்டி வளர்ப்போம்!

#MalaysiaNews
#MalaysiaLatestNews
#LatestNews
#Malsysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.