கோலாலம்பூர், 10/09/2024 : சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (SIDEC) சிலாங்கூரில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEகள்) மற்றும் ஆரம்ப வணிபர்கர்களின் வியாபர சூழலை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் 300 க்கும் மேற்பட்ட தொழில்முனைவோரை துரிதப்படுத்தும் நோக்கத்துடன் இக்கழகம் உள்ளது.
பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கு உயர்-சாத்தியமான வணிகங்களுக்கு ஆதரவை வழங்குகிறது.மேலும் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவின் டிஜிட்டல் மையமாக சிலாங்கூரை டிஜிட்டல் மாற்றத்திற்கு வழிவகுத்த SIDEC மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை இலக்கியல் அமைச்சர் கோபிந்த் சிங் பாராட்டி பேசினார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூன்று முக்கிய துறைகளான இ-காமர்ஸ், ஸ்டார்ட்அப் மற்றும் SME டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதுபோன்ற டிஜிட்டல் முயற்சிகளை மேலும் பல மாநிலங்கள் செய்ய வேண்டும்மென, சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் “ட்வின் ஆக்சிலரேட்டர்” திட்ட துவக்க விழாவில் கோபிந்த் சிங் இவ்வாறு கோட்டு கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில அமைச்சர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் நடமாட்டத்திற்கான மாநில நிர்வாக கவுன்சிலர் இங் ஷி ஹன்,
சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார கழகத்தின் (SIDEC) தலைமை நிர்வாக அதிகாரி யோங் கை பிங், டத்தோ படுகா சையத் மஷாஃபுடின் சையத் பதருடின் தலைமை செயல் அதிகாரி, அஃபின் இஸ்லாமிய வங்கி பெர்ஹாட் கலந்து கொண்டனர்.