என் தமிழ்

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் சிதைந்த சடலங்கள்

chinaa

கிராபோவ் (உக்ரைன்), 4 ஆகஸ்டு- MH17 விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மேலும் பல சிதைந்த மனித உடல்பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாகக் கூறப்படுகிறது.

சிதைந்த உடல் பாகங்கள் சில கிலோமீட்டர்கள் வரை சிதைந்து கிடப்பதாகவும், மலேசியன் ஏர்லைன்ஸ் சின்னத்துடன் கூடிய விமானத்தின் வால் பகுதி சோளக்காட்டில் காணப்பட்டுள்ளது.

நேரில் கண்ட சாட்சியின் படி, விமானம் ஆகாயத்திலேயே வெடித்த பிறகே அதன் பாகங்கள் கீழே விழுந்துள்ளது. இதனையடுத்து அங்கு வந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திலிருந்து 9 மீட்டர் தூரம் வரை சிதைந்த பாகங்கள் சிதறியுள்ளதைக் கண்டுள்ளனர்.

“மாலை 4 மணிக்கு தூங்க நினைத்தபோது, பலத்த சத்தம் கேட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டது போல் இருந்தது என 64 வயது காத்யா என்பவர் தெரிவித்தார். அவருடைய 34 வயது மகள் நத்தால்யா, அந்த பலத்த சத்தத்தைக் கேட்டு நான் என் குழந்தையுடன் நிலவறைக்குள் சென்று ஒளிந்து கொண்டேன்” என தெரிவித்தார்

Scroll to Top