17 பேர் மரணம் : அனகபள்ளி மருந்து ஆலை வெடி விபத்து

17 பேர் மரணம் : அனகபள்ளி மருந்து ஆலை வெடி விபத்து

இந்தியா ஆந்திர பிரதேச மாநிலத்தில் அனகபள்ளி மாவட்டத்தில் அட்சுதபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் உலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக் உயர்ந்துள்ளது. அனகபள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் இறப்புகளை உறுதிப்படுத்தினார்.

மருந்து ஆலையில் 200 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது 500 கிலோ லிட்டர் திறன் கொண்ட உலை வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

ஆந்திர பிரதேச முதல் மந்திரி N சந்திர பாபு நாயுடு இந்த விபத்து குறித்து விசாரிக்க உயர் மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளார். விபத்தில் இறந்தவர்கள் குடும்பம் மற்றும் காயமடைந்தவர்களை இன்று முதலைச்சர் சந்திக்க இருக்கிறார்

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல்களை தெரிவித்தார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாகவும் வேண்டிக் கொண்டார். இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபார் நிவாரண நிதியாக பிரதமர் அறிவித்திருப்பதாக பிரதம மந்திரி அலுவலக குறிப்பு தெரிவிக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.