மலேசிய இந்து சங்கம் புக்கிட் செந்தோசா வட்டாரப் பேரவையின் 46ஆம் ஆண்டு திருமுறை விழா

மலேசிய இந்து சங்கம் புக்கிட் செந்தோசா வட்டாரப் பேரவையின் 46ஆம் ஆண்டு  திருமுறை விழா

கடந்த 11/8/2024, மலேசிய இந்து சங்கம் புக்கிட் செந்தோசா வட்டாரப் பேரவையின் 46ஆம் ஆண்டு திருமுறை விழா விமரிசையாக சுங்கை சோ தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்றது இந்நிகழ்வில் , இந்து சங்கம் மத்திய செலவை உறுப்பினர் தொண்டர்மணி கணமூர்த்தி அரிகிருஷ்ணன், மாநில தலைவர் தொண்டர் மாமணி மனோகரன் மாநில செயலாளர் திரு . முருகன் சுங்கை சோ தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி லிங்கப்பன் சுங்கை சோ தமிழ் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் குமரசன், டாக்டர் சிவபிரகாஷ், ,திரு பாலசுந்தரம், மாவட்ட உறுப்பினர்கள், திருமுருகன், திரு புவனேஷ்வரன், திருமதி திலாகவதி, கிரமாத்ததலைவர் குமார் ராவ்,செரண்டா செல்வ விநாயக ஆலய செயலாளர் திரு. சசிதரன் சங்கை காப்பி ஆலய தலைவர் திரு. வேலாயுதம் ஆகியோர் சிறப்பாக கலந்து சிறப்பிதார்கள். இம்முறை 183 பங்கேற்பாளர்கள் பல்வேறு நிலையிலாளன திருமுறை போட்டிகளில் பங்கேற்றனர். வட்டாரத்தில் சிறந்து சேவையாற்றியவர்களுக்கும் சிறப்பு நல்கப்பட்டன, …நிகழ்வில் மக்கள் நல 5 அம்சம் திட்டமும் அதிகாரப்பூர்வமாக ( Program Mesra komuniti PMK-5A) தொடக்கிவைக்கப்பட்டது, என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற மக்கள் நல திட்டங்களுக்கு முற்றிலும்,பிரதமரின் ஆதரவு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த திரு சுரேஷ்குமார் அவர்கள் தெரிவித்தார். மாணவர்களின் பெற்றோர் உட்பட பெரும் திரளானோர் கலந்து சிறப்பித்தனர். முத்தாய்ப்பாக நிகழ்வில், விரைவில் ஆசிரியர் பணிநிறைவு பெறும் திருமதி ஜெயந்திலிங்கப்பன் அவர்களுக்கு நல்லாசான் விருதும், வட்டாரத்தில் பலகாலமாக பன்னிரு திருமுறையை போதிக்கும் திருமதி கோமதிபக்கிரி அவர்களுக்கு திருமுறைச்செல்வி விருதும் , வட்டாரபேரவை வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றிவரும் மகளிர் தலைவி திருமதி ஷீலாதுரை செல்வதுரை அவர்களுக்கு மகளிர்மணி விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.