டாடர்ஸ்தான் குடியரசின் ஜனாதிபதி ருஸ்டம் மின்னிகானோவ் 13/08/2024 அன்று மாண்புமிகு பிரதம மந்திரு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தார்.
டாடர்ஸ்தான் குடியரசு ரஷியா கூட்டமைப்பில் இஸ்லாம் பெரும்பான்மை உள்ள ஒரு பகுதியாகும்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக மலேசியா வந்துள்ள மின்னிகானோவ் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நேற்று சந்தித்தார் என பிரதமர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ரஷியாவிற்கும் இஸ்லாமிய நாடுகளுக்குமான குறிப்பாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்குமான(IOC) இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து நெடு நேரம் கலந்தாசித்தாக பிரதமர் தெரிவித்துள்ளார்
BRICS(Brazil, Russia, India, China and South Africa) அமைப்பில் மலேசியாவும் இணைவது குறித்தும் பேசினோம். இடது குறித்து முன்னரே ரஷியாவிடமும் மலேசியாவின் விருப்பத்தை தெரிவித்துள்ளோம்.
இந்த சந்திப்பின் மூலம் கல்வி மற்றுமல்லாமல் ஹலால் துறையிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.