மலேசியா மற்றும் புருனே இடையே சிறப்பான உறவு பாதுகாக்கப்பட வேண்டும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் ஊக்குவிப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் கூறினார்.
நேற்றிரவு பந்தர் செரி பெகவானில் மலேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 40 வது ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூறும் இரவு விருந்தின் போது முஹமட் இவ்வாறு கூறினார்.
இந்த விழாவில் புருனே நாட்டின் உயரதிகாரிகள், புருனே அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மலேசியா மற்றும் புருனே இடையேயான கடிதப் பரிமாற்றத்தின் (EOL-25) 25வது செயலாக்கக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முகமட் தற்போது புருனேயில் இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.