பள்ளி வளாகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட் பிடிப்பது அல்லது Vape பிடிப்பது உள்ளிட்ட சமூக சீர்கேடு நடத்தையில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வி அமைச்சகம் (கேபிஎம்) இந்த சிக்கலை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி எப்போதும் உறுதியாக செயல்படும் என்றும் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் கூறினார்.
‘ஒட்டுமொத்த ஒழுங்கு நடவடிக்கைகளை உறுதிபடுத்தவும் நினைவுபடுத்தவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே இது”.
“மாணவர்கள் பள்ளி சூழல் அமைப்பில் உள்ளனர் என்பதை குழந்தைகளுக்கு நினைவூட்டுவது பள்ளி நிர்வாகிகளின் பணியாகும், ஆனால் அது போதாது, ஏனெனில் அதற்கு பெற்றோரின் பங்கும் தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இங்கு புதிய மாராங் கல்வி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஃபத்லினா மேலும் கூறுகையில், சிறு குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கு பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவும் தேவைப்படுகிறது, இதன் வழி மாணவர்கள் சுதந்திரமாக வேப் பொருட்களை வாங்கும் போக்கை சரியாக கையாள முடியும்.
இதற்கிடையில், பள்ளி, சமூகம் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் MOE உறுதியாக இருப்பதாக ஃபத்லினா கூறினார்.
மதானி அரசாங்கம் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டவுடன், MOE இன் கீழ் கல்வி நிறுவனங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல் மற்றும் பலப்படுத்துதல் மூலம் பிரச்சினையை கையாள்வதில் MOE தொடர்ந்து உறுதியாக இருந்தது என்றார்.