ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியகம் 1-ந்தேதி திறப்பு

ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியகம் 1-ந்தேதி திறப்பு

203_03471

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இதில் ஆங்கிலேயர்கள் காலத்து அலங்கார குதிரை வண்டி பெட்டிகள், போரில் பயன்படுத்திய ஆயுதங்கள், அரிய புகைப்படங்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மரச்சாமான்கள், 19-ம் நூற்றாண்டின் ஓவியங்கள், ஜனாதிபதி மாளிகைக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. 

இந்த அருங்காட்சியகம் வருகிற 1-ந்தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 30-ந்தேதி முடிய இதனை இலவசமாக பார்வையிடலாம். அருங்காட்சியகத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் அன்னை தெரசா பிறைச் சாலையில் உள்ள வாசல் எண்.30-ல் அமைக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 1-ந்தேதி முதல் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட குறைந்த கட்டணமாக பெரியவர்களுக்கு தலா ரூ.25 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 12 வயதுக்கு உட்பட்டோருக்கு இலவசம். 30 பேர் கொண்ட குழுவுக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படும்.