நைஜீரியாவில் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றும் அரசு அமைய வலியுறுத்தி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கூட மாணவிகள் 200-க்கும் மேற்பட்டவர்களை கடத்திச்சென்று விட்டனர். அவர்களை தேடும்பணியில் அண்டை நாடுகளின் ஒத்துழைப்போடு நைஜீரிய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் நைஜீரியாவின் ஹனோ மாநிலத்தில் நேற்று முன்தினம் பெண் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். பெட்ரோல் நிலையங்கள் மீது பெண் மனித வெடிகுண்டு தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அடுத்து கனோவில் உள்ள ஒரு வர்த்தக மையத்தில் மற்றொரு பெண் தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. ஆனால், 6 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த சில குடியிருப்புகளும் சேதம் அடைந்தன.
Previous Post: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பட்டியல் நிலவரம்