மக்கள் ஆரோக்கியமான உணவுகளை அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்து வாங்க வசதியாக மலேசிய சுகாதார அமைச்சு ஆரோக்கியமான தேர்வு சின்னத்தை (இலட்சினை) (Healthier Choice Logo, HCL) வெளியிட்டது. மக்கள் ஆரோக்கியமான உனவுகளை தேர்வு செய்ய உதவியாக உணவுப் பொட்டலங்களின் மீது இந்த சின்னம் இடம்பெறும். உணவும் மற்றும் குளிர்பானங்களில் இந்த சின்னம் இடம்பெறும். சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவு நிர்ணயித்துள்ள அளவில் சக்கரை, உப்பு, கொழுப்பு ஆகிய அளவுகோல்களை கடைபிடிக்கும் உணவு மற்றும் குளிர்பான தாயாரிப்பு நிறுவனங்கள் இந்த சின்னத்தை பெற முடியும். இந்த சின்னம் முற்றிலும் இசவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான உணவினை உணவும் மற்றும் குளிர்பான தயாரிப்பாளர்கள் வழங்குவார்கள்.
Healthier Choice Logo, HCL – மலேசிய சுகாதார அமைச்சு
