உலகம் முழுவதும் நேற்று முதல் ரமலான் பண்டிகை கொண்டாட்டம் துவங்கியுள்ளது. இதற்கென முஸ்லிம் மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
நோன்பு முடித்து ரமலான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். நைஜீரியாவில் ஞாயிற்றுக்கிழமையும், ஓமன், மொரக்கோ, கபான், தான்சானியா, அஜர்பைஜான், நாடுகளில் திங்கட்கிழமையும் கொண்டாடப்படுகிறது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தானில் திங்களும், செவ்வாயும் ரமலான் கொண்டாடப்படுகிறது. தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் நேற்று ரமலான் கடைபிடிக்கப்பட்டது.
ரமலான் முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து கூறி உள்ளனர்.