அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். கடுமையான காற்று வீசி வருவதால் அடிவாரத்தில் உள்ள ஏராளமான வீடுகளும் தீயில் கருகும் அபாயம் உள்ளது.
தலைநகர் சாக்ரமென்ட்ரோவின் கிழக்குப் பகுதியில் உள்ள சியரா நிவேதா மலையடிவாரத்தில் வறண்டு கிடந்த தாவரங்களுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை வேகமாக ஒரு வாகனம் சென்றபோது தீப்பிடித்துள்ளது. பின்னர் தீ மளமளவெனப் பரவியதில் 13 வீடுகள் மற்றும் 40 பிற கட்டிடங்கள் கருகின.
தீ பரவி வரும் மலைப்பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள 515 வீடுகள் தீயில் சிக்கும் அபாயம் உள்ளது. சாக்ரமென்டோ மற்றும் அருகில் உள்ள யாஸ்மைத் தேசிய பூங்காவையும் தீ நெருங்கி வருகிறது. இந்த காட்டுத் தீயை அணைக்க 1900 தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.