பிலிப்பைன்சில் இஸ்லாமிய போராளிகள் தாக்குதல்: 18 பொதுமக்கள் பலி

பிலிப்பைன்சில் இஸ்லாமிய போராளிகள் தாக்குதல்: 18 பொதுமக்கள் பலி

1229822

பிலிப்பைன்சில் இஸ்லாமிய போராளிகள் நடத்திய தாக்குதலில் 18 பொதுமக்கள் பலியானதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. 

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சில தீவுகளில் இஸ்லாமிய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அத்தீவில் செயல்படும் இஸ்லாமிய போராளிகள் அமைப்பு அரசுக்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனால் அந்நாட்டின் அமைதி வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் மக்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக இருந்தது போராளிகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே பொதுமக்கள் மீது போராளிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று ஜோலோ தீவில் ஈத் பெருவிழாவை கொண்டாடும் வண்ணம் மக்கள் சிலர் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அபு சயாப் என்று குழுவை சேர்ந்த 50 போராளிகள் பொதுமக்கள் பயணம் செய்த வாகனத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தினர். 

இத்தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவார்கள். மேலும் குழந்தைகள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசுப்படையினர், தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.