காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம்: 8 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி

காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம்: 8 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி

weightlifting

வேலூர் சத்துவாச்சாரி புதுதெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம். காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கம் வென்றதை கேள்விபட்ட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சதீஷ்குமார் சத்துவாச்சாரியில் உள்ள அரசு (மாநகராட்சி) உயர்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்த போது அந்த பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பளுதூக்க ஆரம்பித்தார். அப்போது பளுதூக்குவதில் திறமையாக செயல்பட்டுள்ளார். அவரது திறமையை கண்டு வியந்த உடற்பயிற்சி கூட நிர்வாகிகள் சதீஷ்குமாரை வேலூர் சத்துவாச்சாரி மலை அடிவாரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் பயிற்சி கூடத்தில் சேர்த்தனர். அங்கிருந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். 

தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றார். இதன் மூலம் இந்தியா சார்பில் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வந்தது. 2010–ம் ஆண்டு பல்கோரியாவிலும், 2011–ம் ஆண்டு தென்கொரியாவிலும் நடந்த ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டார். 2012ம் ஆண்டு அபியாவில் நடந்த பளுதூக்கும் போட்டியிலும், 2013–ம் ஆண்டு நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார். 

கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த சதீஷ்குமார் நேற்று காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் 149 கிலோ எடை தூக்கி தங்க பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் இந்த பிரிவில் 148 எடை இதுவரை தூக்கியுள்ளனர். சதீஷ்குமார் 149 கிலோ தூக்கி சாதனை படைத்துள்ளார்.