ஈராக்கில் மேலும் ஒரு மசூதியை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் தரைமட்டமாக்கினர்

ஈராக்கில் மேலும் ஒரு மசூதியை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் தரைமட்டமாக்கினர்

mosque

ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ அமைப்பை சேர்ந்த போராளிகள் ராணுவத்துடன் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். சன்னி பிரிவை சேர்ந்த இவர்கள் ஈராக்கின் மொசூல், கிர்குக்–திக்ரித் உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.

சிரியாவில் சில பகுதிகளும் இவர்களது கட்டுப்பாட்டுக்குகள் வந்துவிட்டது. எனவே, ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய பகுதிகளை ஒன்றிணைத்து தனியாக ‘இஸ்லாமிய நாடு’ அமைத்துள்ளனர்.

அதன் தலைவராக அபுபகர் அல்–பக்தாதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அமைத்துள்ள புதிய நாட்டில் அதிரடி உத்தரவுகள் மற்றும் சட்டங்களை தீவிரவாதிகள் பிறப்பித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்களை உருவாக்கியுள்ளனர்.

மொசூல் நகரில் இருந்து கிறிஸ்தவர்களை மிரட்டி வெளியேற்றியுள்ளனர். மொசூல் நகரில் சன்னி பிரிவின் நபி ஷியத் என்ற வழிபாட்டு தலம் உள்ளது. அதை போராளிகள் நேற்று முன்தினம் குண்டு வைத்து தகர்த்தனர்.

அதனையடுத்து, யூனுஸ் நபி என்பவரின் அடக்கஸ்தலம் மற்றும் அவர் காலத்து மசூதியையும் இடித்து தள்ளினர்.

இந்நிலையில், மொசூல் நகரில் உள்ள இன்னொரு வரலாற்று சிறப்பு மிக்க மசூதியையும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் இடித்து தரைமட்டமாக்கினர். ஜிஜ்ரிஸ் நபி என்றழைக்கப்பட்டவரின் அடக்கஸ்தலம் மற்றும் அவர் காலத்து மசூதியையும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் இன்று இடித்து தரைமட்டமாக்கி விட்டதாக மொசூல் நகரவாசிகள் தெரிவித்துள்ளனர்.