கோலாலம்பூர், 24 ஜூலை- ஒவ்வொரு ஆண்டும் நோன்புப் பெருநாளின் போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஶ்ரீ பெர்டானாவில் நடைபெறும் திறந்த இல்ல விருந்துபசரிப்பு இவ்வாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஷாவ்வால், முதல் நாளன்று நடத்தப்படும் அந்த திறந்த இல்ல உபசரிப்பு இம்முறை கடந்த வியாழக்கிழமை MH17 விமான விபத்தில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இம்முடிவு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஆகஸ்டு 17-ஆம் தேதி டத்தாரான் ரெம்பாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிலையிலான நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிரவு வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.