பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியாவில் மெர்சி பிட்ஸ்ஜெரால்டு மருத்துவமனையில் நுழைந்த மனநோயாளி ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் செவிலியர் ஒருவர் பலியானார்.
மனநோயாளியான அவன் மருத்துவமனைக்குள் நுழைந்த பின், மனநோய் பிரிவுக்கு வந்தவுடன் தனது துப்பாக்கியை கொண்டு செவிலியரை நோக்கி சுட அவர் அங்கேயே பலியானார். பின்னர் அவன் மருத்துவரை நோக்கி சுட ஆரம்பிக்க அவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே சுதாரித்த மருத்துவர் தன்னிடமிருந்த துப்பாக்கியை கொண்டு தன்னை சுட்ட மனநோளியை சுட்டுள்ளார். இதில் அவனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அந்த மனநோயாளி மருத்துவமனை ஊழியர்களால் பிடிக்கப்பட்டான். இது குறித்த தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் மனநோயாளியை பாதுகாப்புடன் சிகிச்சைக்கு அழைத்துசென்றனர். மருத்துவரும் தனக்கு ஏற்பட்ட துப்பாக்கி காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போது மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.