ஆகஸ்டு முதல் வாரத்தில் நேபாளம் செல்கிறார்:மோடி

ஆகஸ்டு முதல் வாரத்தில் நேபாளம் செல்கிறார்:மோடி

Narendra

ஆகஸ்டு முதல் வாரத்தில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக நேபாள நாட்டுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நேபாள நாட்டுக்கு அவர் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். 18 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக இந்திய தலைமைப்பதவியில் உள்ள ஒருவர் அந்நாட்டிற்கு செல்வது பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராவின் அழைப்பை ஏற்ற மோடி வரும் 3 மற்றும் 4 தேதிகளில் தங்கள் நாட்டிற்கு வர உள்ளதாக அந்நாட்டு வெளியுறுவுத்துறை அமைச்சர் மகேந்திர பாண்டே கூறியுள்ளார். நேற்று பிரதமர் கொய்ராலாவை சந்தித்து ஆலோசனை நடத்திய சிறிது நேரத்திலேயே மோடி பயணத்திற்கான அறிவிப்பை பாண்டே வெளியிட்டார். மோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட போது தங்கள் நாட்டிற்கு வருமாறு கொய்ராலா அழைப்பு விடுத்திருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

வரும் 1ந் தேதி காத்மண்டு செல்லும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மோடி வருகைக்கு வழி வகுப்பார் என கூறப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற கொய்ராலா நேற்று முன் தினம் தான் நேபாளத்திற்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.