மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் வழங்கும் இசைஞானி இளையராஜாவின் ராஜா த ஒன் மேன் என்ற இசை நிகழ்ச்சி எதிர்வருகின்ற அக்டோபர் 07 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாடா அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியை முன்னிட்டு பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் திரு மனோ அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று 23/09/2017 காலை ஹோட்டலில் நடைபெற்றது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் குழுமத்தின் தலைவர் திரு ஷாகுல் ஹமீத் பேசுகையில் ராஜா த ஒன் மேன் இசை நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் நடக்கும் என்று தெரிவித்தார். மேலும் நேயர் விருப்பமாக சுமார் 5 பாடல்கள் பாடப்படும் என்றும் அவர் தெர்வித்தார். மலேசியாவிலேயே இதுவரை இல்லாத வகையில் சுமார் 80 இசை கலைஞர்கள் பங்கு பெரும் ஒரு முழு ஆர்கெஸ்ட்ரா இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சியில் இசைஞானியுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்துவார்கள் என்றும் அவர் தெர்வித்தார். ஒரு நல்லெண்ண அடிப்படையில் அனாதை இல்லக் குழந்தைகள் சிலருக்கு இந்த இசை நிகழ்ச்சியை இலவசக்மாக கண்டு ரசிக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் ஷாகும் ஹமீத் தெரிவித்தார்.
பாடகர் மனோ பேசுகையில் இசைஞானியை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இசைஞானியின் வேலையில் இருக்கும் நேர்த்தி அவருடைய நேரம் தவறாமை பற்றியும் எப்படி இளையராஜாவிற்காகவே திரைப்படங்கள் ஒரு காலத்தில் ஓடியது என்பது குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். மலேசிய கலைஞர்களுக்கு இளையராஜாவிற்கு அறிமுகம் ஆகவும் அல்லது அன்று பாட இருக்கும் மற்ற பாடகர்களுடன் ஒரு அறிமுகம் ஏற்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் தளமாகவும் இது இருக்கலாம் என மனோ தெரிவித்தார். பத்திரிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பாடகர் மனோ ”தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே” என்ற நாயகன் படப் பாடலை ராஜா அவர்களின் குரலில் பாடி அசத்தினார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராஜா த ஒன் மேன் இசை நிகழ்ச்சியின் விளம்பர தூதர்கள் நடிகை கலபனா ஸ்ரீ, நடிகை ஜாஸ்மின் மைக்கேல், இசையமைப்பாளர் லாரன்ஸ், நடிகர் லியோன், நடிகர் சசி போன்ற மலேசிய கலைஞர்களும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றார்கள். அவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் தங்கள் பங்கு அளிப்பதை பற்றி அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பை தொடர்ந்து மனோ அவர்கள் அவரது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.