ஆஸ்ட்ரோவின் மாபெரும் 3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.
செப்டம்பர் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், இவ்விழாவை நடிகை ராய் லஷ்மி அதிகாரப்பூர்வமாகத் துவங்கி வைத்தார்.
இவருடன் அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் நிர்வாக குழும மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, அஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர், முருகையா வெள்ளை, இந்தியத் தூதரகத்தின் முதல் செயலாளர், பிரம்ஹா குமார், நெஸ்ட்லே மேலாளர் வேலாயுதம் சண்முகம், ஜிஎம் கிள்ளான் மூத்த மேலாளர், ரோபின் லோ ஆகிய முக்கிய பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பிறகு, அறிவிப்பாளர் டினிஸ் மற்றும் சுஸ்மித்தா ராய் லஷ்மியை மேடையில் 15 நிமிடங்களுக்கு நேர்காணல் செய்தனர். கேட்ட கேள்விகளுக்குப் பதில்களை வழங்கி டினிஸ் உடன் கஞ்சனா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கருப்பு பேரழக’ எனும் பாடலுக்கு நடனத்தை ஆடி ரசிகர்களின் கைத் தட்டல்களைப் பெற்றார்.
நான்கு நாட்களுக்கு இடம்பெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல சுவரஸ்மான நிகழ்ச்சிகளும் போட்டி விளையாட்டுகளும் ரசிகர்களுக்காக நடைபெற்று வருகின்றது.
Astro Circle ஏற்றி நடத்தும் புதையல் தேடும் போட்டி, ஆடை அலங்காரம், டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் நேரடி வெளி ஒலிபரப்பு மற்றும் பின்னணி பாடகி சாதனா சர்கம் கலந்து கொண்ட ‘என்றுமே ராஜா’ எனும் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.
அதை வேளையில், Astro Circle– யின் முறுக்கு செய்யும் போட்டி, 10-ல் 5 தீபாவளி பரிசு மழை, ஆன் டிமாண்ட் நேரம் மற்றும் தாரா எச்.டி-யின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. தொடர்ந்து, அஸ்ட்ரோ வானவில் விரைவில் ஒளியேறவுள்ள ‘சினிமா எனும் நதியினிலே’ அறிமுகம் விழா மற்றும் ‘அஸ்ட்ரோ உறுதிணை விருது’ விழா, ‘தீபாவளி கொண்ட்டாடம் கலைநிகழ்ச்சி’, நம் உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் என பல விஷயங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்று வருகின்றது.
இறுதி நாள் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு நாடன போட்டி, மிமீகிரி போட்டி, கலைஞர்களின் சந்திப்பு, உள்ளூர் பாடகி புனிதா ராஜாவின் ஆல்பம் இசை வெளியீடு, விழுதுகள் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களின் சந்திப்பு மற்றும் டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் கலைநிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறவுள்ளது.
மேல்விவரங்களுக்குwww.astroulagam.com அல்லது www.facebook.com/AstroUlagamஅகப்பக்கங்களை நாடுங்கள்.