கோலாலம்பூர், 15 செப்டம்பர் 2017 – ‘ஸ்மார்ட் வீல்’ புத்தம் புதிய ரியாலிட்டி கேம் ஷோ எதிர்வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி-யில் ஒளியேறவுள்ளது. இந்நிகழ்ச்சியை அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாகவும் கண்டு களிக்கலாம்.
பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 16 போட்டியாளர்கள் இப்போட்டியில் களமிறங்கி கேட்கப்படும் பொது அறிவு மற்றும் நுண்ணறிவு (intelligence quotient) கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்லி ஒவ்வொரு வாரமும் ரொக்க பரிசுகளைத் தட்டிச் செல்லலாம். அதுமட்டுமின்றி,ஆரம்பக்கட்ட சுற்று முதல் அரையிறுதிச் சுற்று வரை அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லும் இரு போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குச் செல்லும் மாபெறும் வாய்ப்பும் காத்துக் கொண்டிருக்கின்றது.
அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் நிர்வாக குழும மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, கூறுகையில், “நாங்கள் நேயர்களுக்குத் தொடர்ந்து சிறந்த நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக இந்தப் புத்தம் புதிய நிகழ்ச்சியான ‘ஸ்மாட் வீல்’ அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு போட்டியாளர்களின் பொது அறிவு மற்றும் நுண்ணறிவு சோதிக்கும் இப்போட்டி, பரபரப்பாகவும் சவால்மிக்கதாகவும் இருக்கவுள்ளது. இவ்வகையான போட்டி வேறும் பொழுதுப் போக்கு நிகழ்ச்சியாக இல்லாமல் இளைய தளமுறையினர்களுக்குத் சிறந்த ஒரு கற்றல் நிகழ்ச்சியாக இருக்கும்”.
இப்போட்டியில் மொத்தம் நான்கு சுற்றுகள் இடம்பெறும். 16 போட்டியாளர்களும் முதல் சுற்றில் போட்டியிடுவார்கள். பிறகு, முதல் சுற்றில் 8 போட்டியாளர்கள் நீக்கப்பட்டு சிறப்பாக விளையாடிய 8 போட்டியாளர்கள் அடுத்தச் சுற்று, அதாவது காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெறுவார்கள். அதனைத் தொடர்ந்து, 4 பேர் நீக்கப்பட்டு இன்னும் மிதமுள்ள 4 போட்டியாளர்கள் அரையிறுதிச் சுற்றுக்குச் செல்வார்கள். இந்தச் சுற்றில் சிறப்பாக விளையாடும் இரு போட்டியாளர்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும். சவால் நிறைந்த இந்தச் சுற்றுதான் இப்போட்டியின் வெற்றியாளரை நிர்ணக்கும். இப்போட்டியை புதிய அறிவிப்பாளர் இர்பான் ஜயினி தொகுத்து வழங்கவுள்ளார்கள்.
முதல் நிலை வெற்றியாளர் ஒருபுரோட்டோன் ஐரிஸ்காரையும் ரொக்கப் பரிசும் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்புக் காத்து கொண்டிருக்கின்றது.
இப்போட்டி நிகழ்ச்சி இன்னும் மெருக்கூட்டும் வகையில் 2 சிறப்பு அத்தியாயங்களில் பிரபல நடிகரும் தொகுப்பாளருமான மா கா பா ஆனந்த் மற்றும் விஜய் டிவி புகழ் டிடி, டி.எச்.ஆர் ராகாவின் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் ஆனந்தா, உதயா ஆகியோர் களமிறங்கி விளையாடவுள்ளார்கள்.
‘ஸ்மார்ட் வீல்’நிகழ்ச்சியின் ஆதரவாளர் ‘BOH’ மற்றும் டி. எச். ஆர் ராகா அதிகாரப்பூர்வ வானொலி நிலையமாகும். இந்நிகழ்ச்சியின் முதல் அத்தியாயத்தை எதிர்வரும் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி-யில், அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் காணத் தவறாதீர்கள்.
மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.myஅகப்பக்கத்தை பார்க்கவும்