செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா : முதல்வர் அறிவிப்பு

செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா : முதல்வர் அறிவிப்பு

JAYALALITHA-ARTICLE1

தமிழக சட்டப்பேரவையில் இன்று அவை விதி எண் 110ன் கீழ் உரையாற்றினார்  முதல்வர் ஜெயலலிதா.

அந்த அறிவிப்பில், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் இந்தியாவின் மையமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் பொருட்டும், மருத்துவ தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டும், மருத்துவ தொழில்நுட்பத் தயாரிப்புகளின் இறக்குமதியை குறைத்து அதன் மூலம் மருத்துவச் செலவைக் குறைக்கும் நோக்கிலும், எச்.எல்.எல். லைப்கேர் லிமிடெட் என்கிற ஓர் இந்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகில் 330 ஏக்கர் நிலபரப்பில் 130 கோடி ரூபாய் திட்ட செலவில் ஒரு மருத்துவப் பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவப் பூங்கா இந்திய நாட்டில் முதன்மையான மருத்துவப் பூங்காவாக அமைவதோடு, மருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்கள் மண்டலம், உயிரி தொழில்நுட்பம், உயிரி தகவல் மண்டலம், அடைகாப்பு வசதி மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மண்டலம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் கொண்டதாகவும் அமையும். இப்பூங்காவில் அமைக்கப்படவுள்ள 100 தொழில் பிரிவுகளில், 30 தொழில் பிரிவுகள் பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், சுமார் 5000 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.