157 தமிழ் பள்ளிகளின் சீரமைப்பிற்கு 25 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி – டத்தோ ப.கமலநாதன் தகவல்

157 தமிழ் பள்ளிகளின் சீரமைப்பிற்கு 25 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி - டத்தோ ப.கமலநாதன் தகவல்

02august_pkalamanathan_4

157 தமிழ் அரசாங்கப் பள்ளீகளின் சீரமைப்பு பணிகளுக்காக 25 மில்லியன் ரிங்கிட் அரசு சிறப்பு நிதியாக பிரித்து வழங்கப்பட்டிருப்பதாக மத்திய கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ ப.கமல்நாதன் ஆகஸ்டு 2 ஆம் தேதி புத்ரா ஜெயா கல்வித் துறை அலுவலகத்தில் தெய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரஜாக் தனது 2017 பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்த 50 மில்லியன் ரிங்கிட்டின் முதல் பகுதியாக இந்த 25 மில்லியன் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது எனவும் மீதமிருக்கும் 25 மில்லிய்ன் ரிங்கிட் எதிர்வருகின்ற செப்டம்பர் மாதம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மொத்தமாக நாட்டில் உள்ள 524 தமிழ் பள்ளிகளிம் 367 பள்ளிகள் அரசு உதவி பெரும் பள்ளிகள், மீதமுள்ள 157 அரசு பள்ளிகளாகும். இவற்றும் சிறப்பு நிதி இதுவரை அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை அரசு பள்ளிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு வழங்கப்படுகின்றது எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த 25 மில்லியன் ரிங்கிட் பெராக்கில் – 49, சிலாங்கூரில் 31, ஜோகூரில் 18, செகிரி செம்பிளானில் 14, கெடாவில் 12, பாகாங்கில் 11, மலாக்காவில் 8, பினாங்கில் 6, கோலாலம்பூரில் 6, கிளந்தானில் 1 மற்றும் பெர்லிஸில் 1 ஆகிய தமிழ் பள்ளிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியும் சமர்பிக்கும் கடந்த கால நிதி ஒதுக்கீடு செலவினங்கள் குறித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டே 2017 பட்ஜெடின் அரசு நிதியை பெற தமிழ் பள்ளிகள் தகுதி பெறும் எனவும் அவர் தெரிவித்தார். அளிக்கப்படும் நிதி விவேகத்துடன் செலவிடப் படுகிறதா என்பதை கண்டறியவே இந்த நடைமுறை என அமைச்சர் தெரிவித்தார்.

 

02august_pkalamanathan_1 02august_pkalamanathan_2 02august_pkalamanathan_3 DATUK P. KAMALANTHAN