குஜராத் அரசின் அலட்சியத்தால் ஐந்து வருடங்களில் 238 சிங்கம் பலியாகியுள்ளது: காங்கிரஸ்

குஜராத் அரசின் அலட்சியத்தால் ஐந்து வருடங்களில் 238 சிங்கம் பலியாகியுள்ளது: காங்கிரஸ்

12_SAVAJ

குஜராத் மாநில வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அம்மாநிலத்தின் கிர் காடுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 238 சிங்கங்கள் பலியானதாக அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான ஹர்ஷத் ரிபாடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவையில் வனத்துறை மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட சென்சஸ் கணக்கெடுப்புக்கு பின் அரசு வெளியிட்ட தகவலின்படி கிர் காடுகளில் 411 சிங்கங்கள் உயிருடன் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அங்கு வெறும் 173 சிங்கங்களே உயிர் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்த ஐந்து ஆண்டுகளில் 238 சிங்கங்கள் இறந்துள்ளது என்பது தானே இதற்கு அர்த்தம். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என ஹர்ஷத் ஆவேசத்துடன் பேசினார்.

அரசின் அலட்சியத்தால் இந்த 173 சிங்கங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்துவிடும் என்று அவர் மேலும் கூறினார். ஆனால் வனத்துறை வெளியிட்ட தகவல் இவ்விவகாரத்தை பூசி மொழுக முயல்வதைப்போல் தெரிகிறது. அதாவது அவர்கள் சிங்கங்களின் எண்ணிக்கையை பற்றி கூறாமல் எவ்வளவு சிங்கம் இறந்ததோ, அதற்கு இணையாக சிங்கக்குட்டிகள் பிறந்துள்ளன என்று அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.