தேசியத் தலைவரின் கல்வி உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ் சுமார் 900 இந்திய மாணவர்கள் பயனடைய இருக்கின்றனர்

தேசியத் தலைவரின் கல்வி உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ் சுமார் 900 இந்திய மாணவர்கள் பயனடைய இருக்கின்றனர்

24july_9

மஇகா புதிதாகத் தொடங்கியுள்ள தேசியத் தலைவரின் கல்வி உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ், இவ்வாண்டு சுமார் 900 இந்திய மாணவர்கள் பயனடைய இருக்கின்றனர். இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ள 18 தனியார் உயர்க்கல்வி கூடங்கள் ஏறத்தாழ 18 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உபகாரச் சம்பளத்தை வழங்க இருப்பதாக மஇகா தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

24/07/2017 அன்று கோலாலம்பூர், புத்ரா உலக வாணிக மையத்தில் இந்த உபகாரச் சம்பளத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தபோது டாக்டர் சுப்ரா இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள இந்தியர்களுக்கான பத்தாண்டு வியூக செயல் திட்டத்தில் (புளுப்பிரிண்ட்) கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மஇகா கல்விக் குழு இன்று இத்திட்டத்தை   தொடக்கியுள்ளது. இதன் மூலம், வறுமை நிலையிலுள்ள 40 விழுக்காட்டுக்கும் கீழுள்ளவர்களைக் கல்வியின் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.

உதவி தேவைப்படும் மாணவர்கள் www.presidentscholer.comஎனும் அகப்பக்கத்தில் தேவையான தகவல்களைப் பெறுவதோடு, விண்ணப்பமும் செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மஇகாவின் முயற்சியில் இந்திய மாணவர்களுக்காக ஏற்கனவே எம்.ஐ.இ.டி., டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் கல்வி நிதி, இந்துஸ் அறவாரியம் போன்றவை மூலம் உயர்க் கல்விக் கூடங்களில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், மஇகா இளைஞர் பிரிவு தொழில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்கி வருகின்றது என்றார் அவர்.

இந்நிகழ்வில், பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, கல்வித் துணையமைச்சர் டத்தோ ப. கமலநாதன், இளைஞர் – விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம். சரவணன், மஇகா தலைவர்கள் உட்பட தனியார் உயர்க்கல்வி கூடங்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

24july_8 24july_7 24july_6 24july_5 24july_4 24july_3 24july_2 24july_1