சுங்கை பூலோ – காஜாங் மெட்ரோ ரெயில் தடம் இரண்டாம் கட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று 17/07/2017 அன்று மாலை நடந்த ஒரு விழாவில் செயல்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பிரதமருடன் அவரது மனைவி துணை பிரதமர், அமைச்சரவை சகாக்கள் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் உயர்மட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் சுங்கை பூலோ – காஜாங் இடையேயான இந்த மெட்ரொ ரெயில் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என குறிப்பிட்டார். இந்த மெட்ரோ ரெயில் இயங்குவதால் சுமார் 160,000 வாகனங்கள் சாலையில் குறையும் என்றும் இதனால் ஆண்டுக்கு கார்பன் வெளியீடு அளவு சுமர் 752,,000 டன் குறையும் என்றும் பிரதமர் கூறினார்.
இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடர்ந்து மக்களுக்கான கட்டமைப்பு வசதி திட்டங்கள் பலவற்றை தமது அரசு செயல்படுத்த உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்த பகுதியில் உள்ள பல தலைநரங்களில் ஏற்படும் 8-10 மணி நேர போக்குவரத்து செரிசல் போன்று கோலாலம்பூரில் ஏற்பட வாய்ப்புகள் நிறையவே தென்படுகின்றன. அதை தவிர்க்கும் வகையில் கோலாலம்பூரில் போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.
சிறப்பான போக்குவரத்து அமைப்பின் மூலம் மக்களின் நேரம் செலவு ஆகியவற்றை மிச்சப்படுத்தி மக்களுக்கு நன்மை பயக்க முடியும். மேலும் இதன் மூலம் உற்பத்தியை பெருக்கமும் ஏற்படுத்துவதுடன் வாழ்க்கை செலவுகளையும் குறைக்க முடியும் என்றும் பிரதமர் கூறினார்.