இன்று 06/07/2017 அன்று மதியம் 1.30 மணி முதல் மாலை 04 மணி வரை ம.இ.கா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் துணைக் காவல்படை பட்டமளிப்பு விழா 2017 நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியாட் அனாக் ஜேம், காவல் துறை ஐ.ஜி தன்ஸ்ரீ டத்தோஸ்ரீ காலித் பின் அபு பக்கர், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் துறை துணை அமைச்சர் டத்தோ M. சரவணன் மற்றும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 256 மலேசிய இந்திய இளைஞர்கள் தங்கள் பயிற்சியை முடித்து துணை காவல்படையில் பணியில் சேருகிறார்கள். ம.இ.கா. தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் முயற்சியால் ம.இ.கா இந்த முயற்சியை மேற்கொண்டு இந்த 256 இளைஞர்களையும் தேர்வு செய்து பயிற்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தது. பயிற்சி முடித்தவர்கள் தங்களை கடமையை சிறப்பாக நிறைவேற்றி மற்ற இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்வார்கள் என பட்டமளிப்பு விழாவில் பங்குபெற்ற ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக டாக்டர் சுப்ரா பயிற்சி முடித்த அனைத்து இளைஞர்களுக்கும் பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இந்த பயிற்சி குறித்தும் பயிற்சி பெற்றவர்களின் பணிகள் குறித்தும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு டாக்டர் சுப்ரா பதில் அளித்தார். மொத்தம் 500 இளைஞர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதில் முதற்கட்டமாக 256 இளைஞர்களுக்கான பயிற்சி இன்று முடிவடைந்தது எனவும் மீதமுள்ளவர்களுக்கு அடுத்த கட்டமாக பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர்களின் பணிகள் காவல்துறைக்கும் உதவும் வகையில் மட்டுமே இருக்கும் எனவும் காவல்துறையின் அதிகாரங்கள் இவர்களுக்கு அளிக்கப்பட மாட்டாது என்றும் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு டாக்டர் சுப்ரா பதில் அளித்தார்.
[vsw id=”aFkPlE55ozE” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]