ம.இ.கா புத்ரா பிரிவு ஏற்பாட்டில் 03/07/2017 அன்று பெட்டாலிங் ஜெயா சிட்டி பல்கலைக்கழகத்தில் சுமார் 21 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவர்கள் கலந்து கொண்ட “Inspire 2 Aspire” கலந்துரையாடல் நிழக்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா தேசிய தலைவரும் மத்திய சுகாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், ம.இ.கா துணைத் தலைவர் திரு. SK தேவமணி, மத்திய கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ P.கமலநாதன், ம.இ.கா தேசிய தகவல் பிரிவு தலைவர் டத்தோ V.S. மோகன், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன், ம.இ.கா தேசிய புத்ரா பிரிவு தலைவர் திரு. யுவராஜா மணியம் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டனர். திரு. தேவமணி இந்திய செயல்திட்டம் குறித்தும் TN50 குறித்தும் விவரித்து பேசினார்.
டாக்டர் சுப்ரா அரசியலுக்கு வருவதற்கு முன் மருத்துவராக தனது பணிகள் குறித்து கலந்துரையாடலின் போது தெரிவித்தார். இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் இந்திய சமூகத்தின் முன் உள்ள சவால்கள், அரசியலில் இளைஞர்கள், மலேசிய இந்திய சமூகத்தின் நன்மைக்காக ம.இ.காவின் பங்கு ஆகியவற்றை பற்றியும் பேசினார். இந்த நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக நடந்தது.