மலேசிய தமிழ் பாடல்களை பாடும் பாட்டுப் போட்டி ஐஸ்டார் நமது நட்சத்திரம் பாட்டி போட்டியின் கால் இறுதிச் சுற்று சுயன் கல்லூரி வளாகத்தில் 02/07/2017 அன்று மாலை 05.30 மணிக்கு துவங்கி நடைபெற்றது.
முன்னராக ஐஸ்டார் நமது நட்சத்திரம் மலேசிய பாடல் பாட்டு போட்டியின் துவக்கச் சுற்று பல ஊர்களில் நடைபெற்றது. அவற்றில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இருந்து சிறப்பாக பாடிய 19 போட்டியாளர்கள் சுயன் கல்லூரியில் நடந்த கால் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட 19 போட்டியாளர்களும் அழகிய மலேசிய தமிழ் பாடல்களை மிகவும் இனிமையாக பாடி போட்டி ஏற்பாட்டாளர்களையும் பார்வையாளர்களையும் ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார்கள். இந்த போட்டியை THR Raga கவிமாறன் அவர்கள் நெறியாளராக இருந்து போட்டியை கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடத்தினார். போட்டியின் முடிவில் திரு. கவிமாறன் அவர்களும் ஒரு இனிய மலேசிய பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் 18-19 வயது உடைய இளையவர்கள். தொழில் முறையில் மேடைகளில் எங்கு இதற்கு முன்னர் எங்கும் பாடிய அனுபவம் இல்லாதவர்கள். இவர்களிடம் இத்தனை திறமை இருக்கிறது என்பதே மலேசிய இந்திய இளைஞர்களிடம் கண்டுகொள்ளப்படாமல் எத்தனை திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன என்பதற்கு சான்றாகும்.
கால் இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட 19 போட்டியாளர்களில் இருந்து அரை இறுதிச் சுற்றுக்கு 12 போட்டியாளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளார்கள்.
இந்த கால் இறுதி போட்டியை MKU Malaysia Kalai Ulagam குழுவினர் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் நேரலை காணொளியாக ஒளிபரப்பி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
போட்டியாளர்களின் பாடல்களை கேட்டு ரசிக்க MKU Malaysia Kalai Ulagam இன் வீடியோக்களை காணலாம்.
https://www.facebook.com/pg/malaysiakalaiulagam/videos/