ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை டி.எச்.ஆர் ராகா வானொலி நிலையம் தங்களுடைய ரசிகர்களுக்காக ‘நடிக்கிறது நாங்க சொல்லறது நீங்க’ எனும் போட்டி ஏற்றி நடத்துகின்றது.
இப்போட்டியில் அறிவிப்பாளர்கள் நடித்த காணொளிகள் டி.எச்.ஆர் ராகாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்/முகநூல் மற்றும் இண்ஸ்டாகிரமில் பதிவேற்றம் செய்யப்படும். அக்காணொளியில் அறிவிப்பாளர்கள் தேர்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் வசனத்தைச் சொல்வார்கள். அவ்வசனம் எந்த திரைப்படத்தில் இடம்பெற்றது என்பதை ரசிகர்கள் கண்டு பிடிக்க வேண்டும்.
அக்காணொளியை நன்கு கவனித்து சரியான பதிலை குறிப்பிட்ட நேரத்தில் அழைத்து பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் ரிம 300 ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.
இப்போட்டி அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கும் ‘கலக்கல் காலை’, ‘ஹலோ நண்பா’, ‘ஹைப்பர் மாலை’ மற்றும் ‘இனிமை@ராகா’ நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும்.
அதுமட்டுமின்றி, கடந்த வாரம் ராகாவின் அகப்பக்கத்தில் 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படம் மற்றும் நம் உள்ளூர் கலைஞர்களின் கைவண்ணத்தில் இசைமைக்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் ரசிகர்கள் தங்களுடைய விருப்ப பாடல்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 200 பாடல்கள் இம்மாதம் 3-ஆம் தேதி தொடக்கம் டி.எச்.ஆர் ராகாவில் இடம்பெறும்.
மேல் விவரங்களுக்கு raaga.fm அகப்பக்கத்தை நாடுங்கள்.
https://www.facebook.com/THRRaagaMalaysia/