சிலாங்கூர் மாநில மலேசிய இந்து சங்கத்தின் 32வது ஆண்டு பொதுக் கூட்டம் 28-05-2017 ஞாயிறு மாலை காஜாங் ஜாலான் ரெக்கோ, ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலய பொன்னம்பலம் மண்டபத்தில் மிக நேர்த்தியாக நடைபெற்றது.
2017-2018 ஆண்டின் புதிய நிர்வாக அமைப்பாக தொண்டர்மணி திரு. மு.முனியாண்டியின் தலைமைத்துவத்தின் கீழ் சிலாங்கூர் மாநில பேரவையின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டது.
இப்பொதுக்கூட்டதில் தீர்மானங்கள் இல்லாத பட்சத்தில் பொது கேள்விகள் கேட்டு அதற்கு தக்க பதில் அளிக்கப்பட்டது.
மேலும் ஒன்பது சங்க சேவையாளர்களுக்கு தேசியத் தலைவர் தலைமையில் தொண்டர்மாமணி, தொண்டர்மணி, விவேக நாயகி, விவேக நாயகன் என்ற விருதுகளை வழங்கி சங்கம் கெளரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் தேசிய பேரவையின் உச்சமன்றமேலாளர்கள் உட்பட 24 வட்டாரச்சங்கப் பொறுப்பாளர்களுடன் ஆலய நிர்வாக பொறுப்பாளர்கள் ஆகியோருடன் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் தியாகராஜன், இராமன் கலந்து சிறப்பித்தனர்.
“சமூக வளைத்தளங்களில் நம்மை நாம் இழிவுப்படுத்துவது இந்து சமய எதிர்க்காலத்திற்கு பேரிழப்பைவித்திடும்.”ஸ்ரீ காசி டத்தோ ஆர். எஸ். மோகன் ஷான் நினைவுறுத்தல்.
அடிப்படை சமயநெறிக் கல்வி ஒன்றுதான் இன்றைய சீர்கேடுகளைக் களைய உதவு முடியுமென மலேசிய இந்து சங்க பேரவையின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி டத்தோ ஆர்.எஸ்.மோகன் வலிவுறுத்தினார்.
நாடுத்தழுவிய அளவில் பல்வேறு சமயம், சமயம் சார்ந்த பணிகளுடன் சமூகத்தின் அடிப்படை மனித நேய நடவடிக்கைகள் மூலம் இது வரை அதன் உன்னத சேவையை மலேசிய இந்து சங்கம் வழங்கிதான் வருகிறது என்று டத்தோ ஆர். எஸ். மோகன் ஷான் குறிப்பிட்டார். ஆலயத்தில் சமய வழிப்பாடுகள் முறையோடு வழிநடத்தி செல்லும் அதே வேளையில் வட்டார சமூக நல சேவைக்கும் அதில் குறிப்பாக வசதியின்மை கொண்ட இந்திய குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மையமாக மேற்கொள்ள முற்பட ஆவணச் செய்ய வேண்டுமென்றார்.
இந்துக்களின் அடையாளமாக விளங்குகிறது நமது ஆலயங்கள் என்பது மிகையாகாது என்றாலும் அதன் அன்றாட கடமைகளில் இன்னும் பல வகையான சமுதாயத் தொண்டு வழியே நிலை நிறுத்த பல்வேறு அமைப்புகள், பொது இயக்கங்கள் ஒண்றினைந்து ஒற்றுமையை வளர்க்க உதவும் படலமாக அத்துடன் சமயநெறி, அடிப்படை சமயக்கல்வி, இவற்றுடன் சமய போதனைகள், சொற்பொழிவு ஆகியவற்றுடன் ஆலயம் தோறும் சமூக சேவைகளை மேற்படும் தளமென்றும், ஐந்து அம்சங்கள் கொண்ட சாரம் வாயிலாக மேலும் அதன் வழி வட்டார மக்கள் பொது நலத்தின் முக்கிய பங்கிற்கு பெரிதும் துணைப் புரியுமென்றார். நமது சமயத்தின் அடிப்படையான சமய நெறி முறைகள் பின்பற்றி நம் எதிர்க்கால தலைமுறைக்கு இன்று மலேசிய இந்து சங்கம் முழு மூச்சாக செயல்பட்டு வரும் தருணமிது என சிலாங்கூர் மாநில மலேசிய இந்து சங்கத்தின் 32வது ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு தலைமையேற்று பேசினார்.
தேசியம் மற்றும் மாநில அரசுடன் தொடர்ந்து மிகுந்த உறவை மலேசிய இந்து சங்கம் வலுப்படுத்தி வருகின்றது. அதில் ஆலய பிரச்சினைகள், மத மாற்றம் போன்றையை தீர்வு காணும் இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது. சுயநலம் இல்லாத தொண்டூழீய எண்ணத்தால் மட்டுமே இத்தகைய சேவைப்பணியை அர்ப்பணம் செய்யப்படும் சங்கத் தொண்டர்கள் உதவியுடனும் இளம் தலைமுறையுடன் புத்தாக்க சிந்தனையுடன் சமய நன்நெறியுடன் கலை, பண்பாடு, கலாச்சாரம், சமயக்கல்வி செழிக்கவும் தழைக்கவும் தொடர்ந்து சங்கம் பாடுப்படும் என உறுதியாளித்தார்.
எத்தகைய சோதனைகள் வந்ததாலும் எத்தனை சவால்கள் மிக்க சட்டரீதியான பிரச்சினைகள் வந்ததாலும் ஆலமரம் போல் தலை நிமிர்ந்து நிற்கும் என்பது திண்ணம்.
மலேசிய இந்து சங்கம் கடந்த 50ஆண்டுகளுக்கும் மேல் நமது நாட்டின் சமயம் காக்கும் பணியில் சற்றும் பின் வாங்கிதும் இல்லை இனியும் வாங்கப் போவதுமில்லை என சங்க பேரவை தேசியத் தலைவர் சுளூரைத்தார்.