ம.இ.கா இளைஞர் பிரிவு வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள ம.இ.கா இளைஞர் பிரிவினருக்கு பிரதியேகமாக தேசிய அளவிலான பயிலரங்கம் ஒன்றை கடந்த 27 & 28 மே களும்பாங் தங்கும் விடுதியில் நடத்தியது.
தேசிய, மாநில, தொகுதி இளைஞர் பிரிவினர் சுமார் 60 பேர் கலந்துக் கொண்ட இந்த பயிலரங்கம் தேர்தல் முன்னெற்பாடு, வேலை பங்கீடு, இளைஞர் பிரிவின் பொறுப்பு என்பதொடு ஒவ்வொரு ம.இ.கா போட்டியிடும் நாற்காலிகளை வெல்ல செய்யவேண்டிய வேலைகள் கலந்தாலோசிக்கப்பட்டது.
முதல்நாள் இப்பயிலரங்கில் கலந்துக் கொண்டு இப்பயிலரங்கத்தை மாண்புமிகு டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் அவர்கள் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். அவர் தமதுரையில் இளைஞர் பிரிவினர் தமது கட்சி தலைமைத்துவத்திற்கு மிகப் பெரிய பங்கை ஆற்றுவதாகவும், புதிய துடிப்பான இளைஞர் தலைவர்களை பார்ப்பது தமக்கு கட்சியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை கொடுக்கிறது என்றார். அதோடு இளைஞர் பிரிவினரின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் வாழ்த்துகளை கூறி விடைப்பெற்றார்.
அதனைத் தொடர்ந்து பயிலரங்கில் பங்குக்கொண்ட பங்கேற்பாளர்களை அழைத்துக் கொண்டு நாம் அறவாரியம் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் பயிற்சி கூடதிற்கு அழைத்து சென்று, விவசாயத் துறையில் இளைஞர் லாபமிட்டும் வழிவகைகளை விவரித்தார்.
மறுநாள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கட்சியின் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம், உதவித் தலைவர் டத்தோ T. மோகன், கல்வித் துணையமைச்சர் டத்தோ P. கமலநாதன் தங்களது செயல்பாடுகளை விளக்கியதோடு இளைஞர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
இளைஞர் பிரிவுத் தலைவர்கள் கட்சியின் எதிர்காலம் என்பதை மனதில் நிறுத்தி ஒவ்வொரு தொகுதியிலும் செயல்படும் போது கட்சியின் தோற்றம் மாறுவதுடன் புதிய ரத்தம் கட்சியில் பாய்வைதையும் கட்சியின் தலைமத்துவம் வலுவடைவதையும் யாராலும் தடுக்க முடியாது என்று இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் தமது முடிவுரையில் கூறினார்.