MH17 கருப்பு பெட்டிகள் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

MH17 கருப்பு பெட்டிகள் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

BlackBox

இன்று காலை மலேசிய நேரப்படி 6.00 மணிக்கு மலேசிய அதிகாரிகளிடம் MH17 இன் இரண்டு கருப்பு பெட்டிகள் டோனெட்ஸ்க் நகரில் உக்ரைன் புரட்சியாளர்களால் ஒப்படைக்கப்பட்டது. மலேசிய அதிகாரிகள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கலோனல் முகமது சுக்ரி அவர்களின் தலைமையில் சென்றனர். அதற்கு முன்னர் பிரிவினைவாத தலைவர் திரு. அலெக்சாண்டர் போரோடாயால் கருப்பு பெட்டிகள் ஒப்படைத்தல் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டது.

கருப்பு பெட்டிகள் நல்ல நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளிருக்கும் விவரங்கள் எதுவும் அழிக்கப் பட்டிருக்காது என நம்புவதாக தனி புலனாய்வு குழுவின் தலைவர் திரு. கைரில் ஹில்மி மொக்தர் கூறினார்.

கருப்பு பெட்டியில் இருக்கும் விமானியின் அறையில் பதிவு செய்யப்பட்ட பேச்சுகள் MH17 விபத்து பற்றிய முக்கிய விவரங்கள் அறிய உதவும் என நம்பப்படுகிறது.